ஓய்வு பெற்ற, இறந்த ஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர்அலுவலகத்தில் இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டகேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோடையை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர், பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தில் மனு அளித்தார்.
அதில் 2003 ஏப்., 1க்கு பின் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்தோரின் விவரம், அவர்களிடம் பிடித்த ஓய்வூதிய தொகை உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.இதற்கு இயக்குனரக பொதுதகவல் அலுவலரான துணை இயக்குனர் (மின் ஆளுமை) பதில் அளித்துள்ளார். அதில் மனுதாரர் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை. இதனால் பதில் அளிக்க முடியாது என, தெரிவித்துள்ளார். பள்ளி கல்வி இயக்குனர் தான், ஆசிரியர்களுக்கு துறை அலுவலராக உள்ளார். அந்த துறை அலுவலகத்திலேயே பணிபுரிவோரின் விவரம் இல்லை என, கூறியிருப்பது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்கு தகவல் தருவதற்காக, 2003 ஏப்.,1க்கு பின்பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை தயார் நிலையில்வைத்திருக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, 2015 மார்ச் 12ல் பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால் அதே அலுவலகத்தில் தகவல் இல்லை என, கூறப்பட்டுள்ளது. இதனால்மீண்டும் தகவல் கேட்டு, மேல்முறையீடு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக