வியாழன், 7 ஜனவரி, 2016

சேவை மையங்களில் வாக்காளர் அட்டை


      சென்னை: அரசு பொது சேவை மையங்களில், வாக்காளர் அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள், அரசு பொது சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன; 
      இம்மையங்களில், வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க முடிவு செய்துள்ளோம்; தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டுள்ளோம்.தற்போது, புதிய அட்டை வழங்க வசூலிக்கப்படும், 25 ரூபாய் கட்டணத்தை, 15 ரூபாயாகக் குறைக்கவும், தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.மேலும், வாக்காளர் பட்டியலில், முகவரி மாற்றம் செய்வதை எளிமைப்படுத்த, புதிய, 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டுள்ளது. அதில், வாக்காளர் அட்டை எண்ணை பதிவு செய்தால், பழைய முகவரி வரும். அதன் அருகே புதிய முகவரியை, 'டைப்' செய்தால் போதும்; தானாகவே பழைய முகவரி 


அகற்றப்பட்டு, புதிய முகவரி சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக