புதன், 20 ஜனவரி, 2016

ஆன்லைன் ரெயில் டிக்கெட்; ஏஜெண்டுகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை 35 நொடிகளுக்கு பிறகே டிக்கெட் பதிவாகும்


ரெயில்வே முன்பதிவு மையங்களில் மட்டுமின்றி, இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலமாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. உண்மையான பயணி ஒருவர், தன் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்து, வங்கி பரிவர்த்தனையை முடித்து டிக்கெட் எடுக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகிவிடும்.ஆனால், சில ஏஜெண்டுகள், விசேஷ சாப்ட்வேர்களை பயன்படுத்தி, முன்கூட்டியே விவரங்களை பதிவு செய்து, அதிவேகமாக டிக்கெட்டுகளை எடுத்து விடுகிறார்கள். இதனால், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போய் விடுகிறது.எனவே, தங்கள் இணையதளத்தை ஏஜெண்டுகள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கவும் ஐ.ஆர்.சி.டி.சி. புதிய பாதுகாப்பு அம்சங்களை இணையதளத்தில் சேர்த்துள்ளது. இதன்படி, ஆன்லைனில் ஒரு டிக்கெட்டை எடுத்து முடிக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகிவிடும். அதற்கு முன்பாக யாரும் டிக்கெட் எடுத்துவிட முடியாது.இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. தலைவர் ஏ.கே.மனோச்சா கூறியதாவது:–35 நொடி என்பது குறைந்தபட்ச நேரம்தான். மற்றபடி, சம்பந்தப்பட்ட பயணிகளுடைய இணையதளத்தின் வேகம், விவரங்களை பூர்த்தி செய்யும் வேகம் ஆகியவற்றைப் பொறுத்து, இந்த நேரம் அதிகரிக்கலாம். அதே சமயத்தில், ஒரு நொடிக்கு 250 டிக்கெட் வீதம் ஒரு நிமிடத்துக்கு 15 ஆயிரம் டிக்கெட் எடுக்கும்வகையில், எங்கள் இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், யாரும் ஊடுருவி இணையதளத்தை முடக்காத வகையில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைனில் உறுதி செய்யப்பட்ட ‘தட்கல்’ டிக்கெட்டுகள் இனிமேல் எளிதாக கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக