ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் தேர்வு செய்ய முடிவு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு விரைவில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடித்தேர்வு மூலமாகவும், 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (உடற் கல்வி இயக்குநர்-கிரேடு-1 உள்பட) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுசெய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த காலியிடங் கள் 2013-14, 2014-15-ம் கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்கள் ஆகும்.
இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய நடை முறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். எனவே, இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெகுவிரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியைப் பொருத்தவரையில், சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலையும், முதுகலையும் படித்திருப்பதுடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். வெவ்வேறு பாடத்தில் இளங்கலையும், முதுகலை பட்ட மும் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க முடியாது. உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் எம்பிஎட் முடித்திருக்க வேண்டும். 57 வயது வரை விண்ணப்பிக் கலாம்.
எழுத்துத்தேர்வில் 110 கேள்விகள் சம்பந்தப்பட்ட பாடத்திலும், 30 வினாக்கள் கல்வியி யல் முறையிலும், 10 கேள்விகள் பொது அறிவு பகுதியில் இருந்தும் (மொத்தம் 150 வினாக்கள்) கேட்கப்படும். சான்றிதழ் சரி பார்ப்பின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு அதிக பட்சம் 4 மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு (பிளஸ்-1, பிளஸ்-1 பணி அனுபவம் மட் டும்) அதிகபட்சம் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக