புதன், 3 ஆகஸ்ட், 2016
திங்கள், 2 மே, 2016
வியாழன், 21 ஏப்ரல், 2016
திங்கள், 18 ஏப்ரல், 2016
புதன், 6 ஏப்ரல், 2016
ஆசிரியர் பொன்மொழிகள் - ஆசிரியர் என்பதில் பெருமை கொள்வோம்.
1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்ஸாண்டர்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்ஸாண்டர்
2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்;
போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். - கதே
போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். - கதே
3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள்.
- ஷேக்ஸ்பியர்
- ஷேக்ஸ்பியர்
4. தாயின் முகம்தான் குழந்தையின் முதல்
பாடப் புத்தகம். - காந்தியடிகள்
பாடப் புத்தகம். - காந்தியடிகள்
5. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள்
செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.
- ஜிக்ஜேக்ளர்
செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.
- ஜிக்ஜேக்ளர்
6. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு
கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர்
உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.
- வில்லியம் ஆல்பர்ட்
கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர்
உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.
- வில்லியம் ஆல்பர்ட்
7. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். - கார்லைல்
8. சிறந்த ஆசிரியருக்குக் கற்பனைத் திறன் உண்டு. அவர்கள் மாணவர்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள்.
- பெர்ஷியா ஆக்ஸ்டெட்
- பெர்ஷியா ஆக்ஸ்டெட்
திங்கள், 7 மார்ச், 2016
பொதுத்தேர்வு மாணவர்களை கலங்கடிக்காதீங்க!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில், முறைகேடுகளை கண்டுபிடிக்க, 3,000 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 15 ஆயிரம் முழு நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 2,000 தொழிற்கல்வி ஆசிரியர்கள், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள், 'டிரில்' மாஸ்டராக இருப்பதால், மாணவ, மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்வதாக, சில மாவட்டங்களில் புகார் எழுந்தது.இதையடுத்து, 'மாணவ, மாணவியரை மிரட்டும் வகையில், அவர்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'மாணவர்களை பெயரளவில் பிடித்து, காப்பியடித்ததாக பதிவு செய்யக்கூடாது. அதற்கான சாட்சி மற்றும் நடைமுறை விதிகளை பின்பற்றியே, பிடிக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தி உள்ளனர். ஒரு மாணவர் காப்பியடித்தோ, 'பிட்' அடித்தோ பிடிபட்டால், அந்த மாணவரின் துண்டுத்தாள் அல்லது காப்பியடித்த தாளை, மாணவரின் கையெழுத்துடன், ஆவணமாக்க வேண்டும் மாணவர் அமர்ந்த அறையில், அந்த இடத்தின் வரைபடம் வரைந்து தர வேண்டும் மாணவர் பிடிபடும் போது இருந்த சாட்சிகளை, அடையாளம் காண வேண்டும்; தேர்வு அறை கண்காணிப்பாளரின் சாட்சி கட்டாயம் தேவை தேர்வுத் துறை ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விசாரிக்கும் போது, சரியான வகையில், சாட்சிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கிடுக்கிப்பிடி விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெயரளவில் பார்வையிடவே முடிகிறது:இதுகுறித்து, உடற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஏற்கனவே எங்களை, 'ஆர்டர்லி' என்ற ஊழியர் போல் நடத்துகின்றனர். எங்களை பறக்கும் படையில் நியமித்துள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபடும் மாணவரை பிடித்தால், அந்த அறையின் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க, நாங்கள் பரிந்துரைக்க முடியும். ஆனால், கண்காணிப்பாளர்கள், எங்களிடம் வாக்குமூலம் தர மறுக்கின்றனர். அவர்களில் பலர் தான் எங்களுக்கு உயரதிகாரிகள் என்பதால், பெயரளவில் தேர்வு அறையை பார்வையிடவே எங்களால் முடிகிறது. இதுபோன்ற கிடுக்கிப்பிடி உத்தரவுகளால், முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க முடியாத சூழல் தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்
செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு
கடந்த 19–ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர்ஜெயலலிதா, பேரவை விதி 110–ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.30–ல் இருந்து ரூ.60 என்று உயர்த்தப்படுகிறது.
அதுபோல அந்த ஊழியர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும் தொகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில்,நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பு 1.2.16 அன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், அதே தேதியில் மற்றொரு அறிவிப்பையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர் ஆகியோருக்கு குழு காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது.
ஊழியரின் மரணத்தை அடுத்து, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகையும் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.இதுதொடர்பாக கே.சண்முகம் பிறப்பித்துள்ள மற்றொரு அரசாணையில், இந்த தொகையை வாரிசுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நேரடியாக வழங்கும். பிப்ரவரி 1–ந் தேதியில்இருந்து இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016
TNPSC VAO Exam 2016 Hall Ticket Download
வியாழன், 18 பிப்ரவரி, 2016
CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:
குணசேகரன் (இந்திய கம்யூ னிஸ்ட்):
புதிய ஓய்வூதியத் திட் டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், இதேதிட்டம் நாடாளுமன்றத்தில் 2004-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் காரண மாக ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் தான் பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி எங்கு இருக்கிறது?நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம்:அந்தப் பணம் அரசு கஜா னாவில்தான் இருக்கிறது.
குணசேகரன்:அரசு ஊழியர் களிடம் பிடித்தம் செய்த பணம், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
அமைச்சர் பன்னீர்செல்வம்:பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யவில்லை. ரூ.14 ஆயிரம்கோடியும் அரசு கஜானாவில் வட்டி யுடன் பாதுகாப்பாக இருக்கிறது.
குணசேகரன்:கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகையால் மின் தேவை அதிகரித்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த நஷ் டத்தை யார் ஈடுகட்டுவது?
அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன்:மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் விலைக் குதான் மின்சாரம் கொள்முதல் செய்ய முடியும். கூடுதல் விலை கொடுத்து ஒருபோதும் மின்சாரம் கொள்முதல் செய்ய முடியாது. குடிசைகள், விவசாயம், நெசவா ளர்களுக்கு மட்டும் மின் கட்ட ணத்தில் சலுகை வழங்கப் படுகிறது. கார்ப்பரேட் கம்பெனி களுக்கு வழங்கப்படுவதில்லை.
குணசேகரன்:சமீபத்தில் ஏற் பட்ட வெள்ளம் நமக்கு படிப் பினையை கொடுத்துள்ளது. குடி சைகள் மட்டுமல்லாமல் நதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மருத்துவமனைகள், கல்வி நிறு வனங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு களையும் அகற்ற வேண்டும்.
அமைச்சர் பன்னீர்செல்வம்:ஆக்கிரமிப்புகளை அளந்து சர்வே செய்து அவற்றை அகற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக கூவம் ஆற்றுப் பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களில் 10 ஆயிரம் பேருக்கு மாற்று இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிர மிப்பு செய்யாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
திங்கள், 15 பிப்ரவரி, 2016
வருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!
இன்று முதல், இணையத்தில் (ஆன் -லைன்) பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணி துவங்குவதால், அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய சூழல், விண்ணப்பதார்களுக்கு ஏற்படாது என, வருவாய் துறை தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 தாலுகா அலுவலகங்களில்,3,512 கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களில் இருக்கும்புஞ்சை, நஞ்சை மற்றும் நத்தம் ஆகிய நிலங்களின், பட்டா பெயர் மாற்றம்,தாலுகா அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்தன.
விளை நிலங்களுக்கு, கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையிலும், வீட்டுமனைகளை உட்பிரிவுகளாக பிரிக்க, நில அளவையர் (சர்வேயர்) பரிந்துரையிலும், தாசில்தாரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பட்டா பெயர் மாற்ற வரும் விண்ணப்பதாரரை, வருவாய் துறைஅதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும்; குறித்த நேரத்திற்குள் பெயர் மாற்றுவதில்லை எனவும், பெயரை மாற்ற பணம் கேட்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இன்று முதல்...இதை தவிர்க்க, மாவட்ட வருவாய் துறை, இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக, நஞ்சை, புஞ்சை நிலங்களின் வகையினங்களை, 'அ' பதிவேட்டில் இருந்து, இணையதளத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள், பதிவேற்றம் செய்து வருகின்றனர்.இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்ததால், இன்றிலிருந்து, வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய,வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யும்திட்டத்தை, முதற்கட்டமாக, உத்திரமேரூர் தாலுகாவில் அறிமுகப்படுத்தி உள்ளோம். அங்கு, கணினி சான்றுகள் அளிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடக்கின்றன.அடுத்ததாக, வாலாஜாபாத் தாலுகாவில், இன்றிலிருந்து இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகளை துவக்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளது.
'விரிவுபத்தப்படும்'
மாவட்டம் முழுவதும், இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தால், வருவாய் துறை சான்றுகள் பெறுவது போல், பட்டா பெயர் மாற்றமும் எளிமையாகிவிடும். இதனால், வருவாய் துறை அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)